திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் ஈரோடு – கோபிசெட்டிபாளையத்தில் 27/05/1985-இல் பிறந்தார். பிறந்த சில மாதங்களிலே தனது தந்தையை பிரிய நேர்ந்தது. திருச்சியிலும் தஞ்சையிலும் சில காலம் வாழ்ந்து பின்பு அர்க்கோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.

இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்றே சொல்லலாம். இவருடைய தாத்தா திரு.அய்யாசாமி அவர்கள் கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாகவும் இவருடைய தாய்மாமன் அதே கோவிலில் தாளவாத்திய கலைஞராகவும் இருந்தனர். இவரது தாயாரும் பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இத்தகைய சூழலில் இவருக்கு இயல்பாகவே நாட்டியக்கலையில் நாட்டம் வந்தது.
 முறைப்படி பரதநாட்டியத்தை திருத்தணி கோவில் தேவாதாசி நர்த்தகியாக இருந்த திருத்தணி. முனிரத்னம் அம்மாள் (வழுவூர்.ராமையா பிள்ளையின் நேரடி சிஷ்யை) அவர்களிடம் வழுவூர் பாணி நடனத்தை நான்கு வருடங்கள் பயின்றார்.

பின்பு காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளியில் தஞ்சை A.ஹேமநாதன் அவர்களிடம் தஞ்சாவூர் பாணி நடனத்தை மூன்று வருடங்கள் கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் சென்னை அடையார் அரசு இசைக்கல்லூரியில் மூன்று வருடங்கள் நாட்டுப்புறக் கலைகளில் பட்டையப் படிப்பை முடித்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை. அனுஷா நரேந்திரகுமார் அவர்களிடம் நடனம் பயின்றதொடு மட்டுமல்லாமல் அவரது கலைகுழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடி இருக்கிறார்.

இசை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அடையார் இசைக்கல்லூரியில் மூன்று வருடங்கள் கடம்(தளவாத்தியம்) பயின்றார்.

பின்பு “Wave Dance academy”-இல் இணைந்து பாம்பே பாஸ்கர் அவர்களிடம் மூன்றரை வருடங்கள் மேற்கத்திய நடனம் பயின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கிராமியக் கலைகளில் சிறந்து விளங்கும் 22-க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களிடம் தங்கியிருந்து குருகுல முறையில்  கிராமியக் கலைகளின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்த காலகட்டத்தில் தான் இவருக்குக் கிராமியக்கலைகளின் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. அந்தத் தூய காதலின் வெளிப்பாடாய் ஒப்பற்ற கிராமியக் கலைகளை உலகமெங்கும் பரப்பும் நோக்கொடு சுக்ரா டான்ஸ் அகாடமியை நிறுவினார்.

Mr.Sundhara Moorthi was born on May 25,1985 in Erode- Gopichettipalayam . Within few months his father left his family. So his mother only took care of him. They lived in Trichi and Tanjur for some time then they moved to Arakkonam.

Mr.Sundhara Moorthi is from an art family. Yes. His grandfather Thiru.Ayya Samy was a Nathaswara Vithwan in Gopichettipalayam Kondathu Kaliyamman Temple where his uncle also was instrumentalist. Even his mother also familiar with Bharatha Natiyam. In this atmosphere he got interest in dance in his young age itself.

  • He properly learned Bharatha Natiyam (Vazhuvoor Form) from Thiruthani temple Devadasi Narthagi Thiruthani. Muniratnam Ammal (Student of Vazhuvoor.Ramayya Pillai) for four years.
  • He learned Bharatha Natiyam (Tanjur Form) from Tanjur.A.Hemanathan in Kanjipuram Government Music School for three years.
  • He got his Bachelor Degree from Chennai Adyar Music College.

He also learned dance from Chennai.Anusha Narendira Kumar and did more than hundred and fifty shows as a member of their troop.

  • To learn music as well he again joined in Adyar Music College and pursued his Bachelor Degree in Kadam(Instrument)
  • He joined in “Wave Dance Academy” and learned Western Dance from Bombay.Baskar for three and half years.
  • Above all he learned Folk Dance from more than twenty two legendary Folk Dancers.

Now he took this responsibility to teach whatever he learned in his dance career. It  made him open “Sukra Dance Academy” which is open for all. Yes, Any Body Can Dance…